• Tue. Feb 18th, 2025

சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.

நாகர்கோவிலில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு உதவித் தொகையை உயர்த்தி வழங்க கேட்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கைது
மாற்றுத்திறனாளின் உதவித்தொகையை ஆந்திர மாநிலம் போன்று ரூபாய் 6000, 10,000 15,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு மணிநேர பணிக்கு முழு நேர சம்பளம் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், திடீர் சாலை மறியல், இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு பற்றிக்கொண்டது.