• Sat. Feb 15th, 2025

சாஸ்தா திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

தெங்கம்புதூர் அருள்மிகு மறுகால் தலைக்கண்டன் சாஸ்தா திருக்கோயிலில் உபயதாரர்கள் மூலம் ரூ. 21 லட்சம் செலவில் கொடிமரம் அமைக்கப்பட்டு, அதற்கான பிரதிஷ்டை மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மராமத்து பொறியாளர் ராஜ்குமார், நாகர்கோயில் தொகுதி கண்காணிப்பாளர் ஆனந்த், ஸ்ரீகாரியம் ஹரிபத்மநாபன், வள்ளலார் பேரவை மாநில தலைவர் சுவாமி பத்மேந்திரா, பக்தர்கள் சங்கம் முருகன், திமுக வட்ட பிரதிநிதி சுப்பிரமணியன், பிரதிநிதி ஆஷாத் உட்பட பக்தர்கள் பங்கேற்றனர்.
ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சிவ ஆகம வேத விற்பனர் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார் கும்பாபி ஷேகம் நடத்தி வைத்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.