• Thu. Jun 8th, 2023

இந்தியாவிற்கு வருகிறது ரஷ்ய கொரோனா தடுப்பூசி

Byகாயத்ரி

Nov 25, 2021

கொரோனாவுக்கு எதிரான ஒற்றை டோஸ் தடுப்பூசியான ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனையை இந்தியாவில் நடத்த ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்ட டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகத்திற்கு இந்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில் சோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்ததை அடுத்து ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமை செயல் அதிகாரி கிரில் டிமிட்ரிவ் தெரிவித்துள்ளார்.

ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி செலுத்திய 6 முதல் 8 மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக 80 சதவீதம் செயல் திறன் கொண்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *