• Sun. Nov 2nd, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

மின்கசிவில் இறந்த மாடு உரிமையாளருக்கு ரூ.50,000 நிதி உதவி

ByE.Sathyamurthy

Jun 13, 2025

கெலமங்கலம் குட்டூர் கிராமத்தில் மின் கசிவில் இறந்த இரண்டு மாடு உரிமையாளருக்கு முன்னாள் அமைச்சர் வேப்பனப்பள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி ரூ.50,000 நிதி உதவி வழங்கினார்,

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் ஒன்றியம், ஆன்னைக்களூ ஊராட்சி, குட்டூர் கிராமத்தில் உள்ள முனியப்பா வயது 45. தந்தையார் பெயர் அண்ணாமலை இவர்கள் மாட்டு கொட்டையில் சில நாட்களுக்கு முன்பு மின் ஒயர் கசிந்து மாட்டுக் கொட்டையில் இரண்டு மாடுகள் தீப்பிடித்து இறந்து விட்டது. என்பதை அறிந்த முன்னாள் அமைச்சர் மற்றும் வேப்பனப்பள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி, இன்று நேரில் குட்டூர் கிராமத்திற்கு முனியப்பா குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். அப்பொழுது உடன் இருந்தவர்கள் அஇஅதிமுக கெலமங்கலம் மேற்கு ஒன்றிய ஒன்றிய செயலாளர் ஜெயபால், முன்னாள் சிறுபான்மையர் பிரிவு மாவட்ட செயலாளர் சையத் அசேன், கெலமங்கலம் நகரச்செயலாளர் மஞ்சுநாத், தேன்கனிக்கோட்டை நகரச் செயலாளர் ஜெயராமன், எம் ஜிஆர் மன்ற மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜே.பி.(எ) ஜெயப்பிரகாஷ், மற்றும் பிரபல தொழிலதிபர் ராமமூர்த்தி, கெலமங்கலம் பேரூராட்சி மன்றத் தலைவர் தேவராஜ், முன்னாள் ஒன்றிய அவைத் தலைவர் பழனிசாமி, கோப்பனப்பள்ளி பாப்பண்ணா, ஊராட்சித் தலைவர்கள் சங்கீதா வெங்கட்ராமன், அனுமந்தபுரம் முன்னாள் ஊராட்சித் தலைவர் யசோதாமணி, இருதுக்கோட்டை முன்னாள் ஊராட்சித் தலைவர் சதீஷ்குமார், இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் நகர மன்ற தலைவர் ராமு, மாது,மற்றும் அஇஅதிமுக மாநில மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் எனப் பலர் உடன் இருந்தனர்.