• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

தமிழில் பெயர் பலகை இல்லையென்றால் அபராதம்

Byவிஷா

Apr 9, 2025

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெயர் பலகைகளில் தமிழில் இல்லையென்றால், உடனே அம்மாவட்ட ஆட்சியர் அபராதம் விதித்து உத்தரவிட்டு வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது..,
”வரும் மே மாதம் 15ஆம் தேதிக்குள் கிருஷ்ணகிரியில் 100 சதவீதம் தமிழில் அனைத்து கடைகள், நிறுவனங்களின் பெயர் பலகை அமைப்பதை உறுதி செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அனைத்து நிறுவனங்களில் பெயர் பலகைகள் தமிழில் அமைப்பது தொடர்பான வழிமுறைகளை கடைப்பிடித்திட வேண்டும்.
நிறுவனங்கள் தங்கள் பெயர் பலகைகளை மே 15க்குள் தமிழில் வைத்திட வேண்டும். அதன் பிறகும் தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்” என அறிவித்துள்ளார்.