• Mon. Aug 24th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு..,

ByS.Ariyanayagam

Feb 4, 2026

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே வாலிபருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. திண்டுக்கல், கொடைரோடு, மாவுத்தம்பட்டியை சோ்ந்த பாலமுருகன் (35) .இவா் சடையாண்டிபுரத்திலிருந்து கொடைரோட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது அருகம்பட்டி ஓடை புதா் பகுதியில் 3 போ் அவரை மறித்து அரிவாள், கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாலமுருகனை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மேலும் மேற்படி சம்பவம் குறித்து அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.