• Tue. Jul 7th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

வாகன சோதனையில் ரூ.3.12 லட்சம் பறிமுதல்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் சோழவந்தான் தொகுதி தேர்தல் பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அமைக் கப்பட்டு தொகுதி முழுவதும் பண பட்டுவாடாவை தடுக்கும் விதமாக கண்காணிப்பு மற்றும் சோதனைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரம் சோதனை சாவடி முன்பாக தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி தினேஷ் குமார் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, ஏட்டு கனகராஜ் ஆகியோர் வாகன சோதனை செய்தனர். அப்போது திருப்பத்தூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஓட்டி வந்த இனோவா காரை சோதனை செய்தபோது அதில் எந்தவித ஆவணமும் இல்லாமல் இருந்த ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 500 பறிமுதல் செய்தனர்.

அதேபோல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி மணிகண்டன் தலைமையில்சப் இன்ஸ்பெக்டர் விருமாண்டி, ஏட்டு ஜேசி குளோரி ஆகியோர் பாண்டியராஜபுரம் ரயில்வே கேட் முன்பாக வாகன சோதனை செய்த போது காரில் வந்த கீழ முத்துப்பட்டி சஞ்சித் என்பவர் ஆவணம் இல்லாமல் வைத்திருந்த ரூ.54,400 பறிமுதல் செய்தனர். மேலும் பறக்கும் படை அதிகாரி நாகராஜா தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, ஏட்டு கனகராஜ் ஆகியோர் பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை முன்பாக வாகன சோதனை செய்தபோது பழங்காநத்தம் அன்பு முருகன் ஓட்டி வந்த காரில் ரூ.1, 01, 000பறிமுதல் செய்தனர்.

பறக்கும் படை அதிகாரி வெங்கடேஸ்வரி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் சுதா, ஏட்டு பிரபாக ரன் ஆகியோர்பாண்டியராஜபுரம் ரயில்வே கேட் முன்பாக வாகன சோதனை செய்தபோதுமதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் ஓட்டி வந்த காரின் ரூ.53 ஆயிரத்தில் பறிமுதல் செய்தனர். இந்த பறிமுதல் செய்த ரூ.3லட்சத்து 12 ஆயிரத்து 900 த்தை வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அதிகாரி சண்முக வடிவேல், உதவி தேர்தல் அதிகாரி தாசில்தார் ராமச்சந்தி ரன்,மற்றும் மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார், தேர்தல் துணை தாசில்தார் கருப்பையா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்த பின் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.