• Sat. Apr 20th, 2024

விழிப்புணர்வும் கண்காணிப்பும் தேவை – மு.க ஸ்டாலின்

உலக நாடுகளில் கொரோனா அதிகரிப்பால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு முதல்வர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 4வது அலை தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் தினசரி பாதிப்பு ஆயிரமாக குறைந்து விட்டது என்றாலும் இங்கும் நான்காவது அலை வர வாய்ப்பு உள்ளதாகவே அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

நாடுமுழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பினாலும் ஒருவித அச்ச உணர்வு இருந்து கொண்டேதான் இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 4ம் அலை வருமா வராதா என்று தெரியவில்லை. ஆனால் தேவையான நடவடிக்கை அனைத்தையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. தமிழகத்தில் 22 மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு பூஜ்யமாக உள்ளது என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்ரமணியன், கடந்த 10 நாட்களாக இறப்பு எண்ணிக்கையும் பூஜ்யமாக உள்ளது. பொது மக்கள் தொற்றில் இருந்து விடுபட்டு விட்டோம் என அலட்சியமாக இருக்கக்கூடாது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை அடுத்த 3 மாதத்திற்கு தொடர்ந்து பின்பற்ற வேண்டும். மேலும், அருகே இருக்கும் மாநிலங்கள், நாடுகளில் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது அதனால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் இன்னும் 51 லட்சம் பேர் தற்போது வரையும் முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்தாமல் இருக்கிறார்கள். அதேபோல 1.32 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாமல் இருக்கிறார்கள். முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்தி கொள்ளாமல் இருப்பவர்கள் குறித்து முதல்வர் இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சில நாடுகளில் தொற்று அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

கொரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அளிப்பதா அல்லது கட்டுப்பாடுகளை விதிப்பதா என்பது குறித்து முதல்வர் ஈடுபட்டுள்ளார்.தளர்வுகள் பற்றி அமைச்சர்கள்,அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். வருகின்ற 31ஆம் தேதியுடன் கொரோனா பொது முடக்கம் தளர்வு முடிவடைய உள்ள நிலையில், முதல்வர் ஆலோசனையில் நடத்தினார். ஆலோசனைக்குப் பிறகு அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

உலக நாடுகளில் கொரோனா அதிகரிப்பால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு முதல்வர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துதல் 100% நிலையை எட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *