சில காலங்களா டிக்டாக் தமிழ்நாட்டை மட்டும் இல்லாம பல நாட்டை உலுக்கிவிட்டது.இதை தடை செய்தாலும் பல பிரச்சனைகள் இதனால் ஏற்படத்தான் செய்கிறது.அந்த வகையில் ரவுடி பேபி சூர்யா என்கிற சுப்புலட்சுமி டிக்டாக்கில் பிரபலமாகி பல லீலைகள் செய்த வருகிறார்.
தற்போது யூடியூபராகவும் இருக்கிறார்.இவர் மீது பல குற்றங்கள் சுமத்தப்பட்டாலும் வெளியோ சோக்காகதான் திரிகிறார்.தற்போது ரவுடி பேபி சூர்யா மேல் ஒரு பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் ரவுடி பேபி சூர்யாவை கைது செய்யவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வதாக காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
சூர்யா கஷ்டத்தில் இருக்கும் பெண்களை குறிவைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சூர்யாவின் பின்னாடி பெரிய அரசியல்வாதிகளின் தூண்டுதல்கள் இருப்பதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்…
டிக்டாக்கில் அழிச்சாட்டியம் செய்த ரவுடி பேபி சூர்யா இப்படி ஒரு கேவலமான செயலில் ஈடுப்பட்டிருப்பது ஏற்றுக்க முடியாத செயல் என்றும் விரைவில் சூர்யாவை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பெண் கேட்டுக்கொண்டுள்ளார்.