• Mon. Dec 9th, 2024

நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர் நீதிமன்றத்தில் சரண்

Byமதி

Nov 23, 2021

திண்டுக்கல்லில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு, கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

பல்வேறு முயற்சிகள் எடுத்தும் தாளாளர் ஜோதிமுருகன் மீது யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், சமீபத்தில் பழனி சாலை அருகே உள்ள அழகுப்பட்டி கிராமம் செல்லும் சாலையில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று மாணவிகளிடம் விசாரணை செய்தனர். பின்னர் மாணவிகள் களைந்து சென்றனர். ஆனால் அதன் பிறகு கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் தலைமறைவானர்.

இந்த நிலையில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த ஜோதிமுருகன் போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.