• Sat. Jun 10th, 2023

வரிசை கட்டும் அ.தி.மு.க.வினர், வரவேற்கும் தி.மு.க.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தொகுதி தமிழக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாகும். இந்த தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் எம் ஜி ஆர் போட்டியிட்டு அமெரிக்காவில் இருந்து கொண்டே வெற்றி பெற்றதால் அதி முக்கியத்துவம் பெற்றது.

அவருக்கு பின்னால் அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா இந்த தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். அதிமுக கோட்டையாக இருந்த ஆண்டிபட்டியில் தற்போது திமுக வலுப்பெற்று வருகிறது.

அதிமுக மாவட்ட கவுன்சிலர் ஜி.கே.பாண்டியன் ஆண்டிபட்டி பேரூர் கழக செயலாளர் முத்து வெங்கட்ராமன் துணைச் செயலாளர் தங்கவேலு இணைச் செயலாளர் Ex.கவுன்சிலர் மாரியம்மாள் மாவட்ட பிரதிநிதி Ex. கவுன்சிலர் தங்கராஜ் மாவட்ட பிரதிநிதி கருப்புசாமி Ex. கவுன்சிலர் சக்கம்பட்டி கூட்டுறவு பண்டகசாலை (பொறுப்பு) தலைவர் ஜெயபால் ஆண்டிபட்டி கூட்டுறவு பண்டகசாலை துணை தலைவர் பாரத் Ex. கவுன்சிலர் கார்த்திக் அதிமுக பிரமுகர் Ex. ஊராட்சி மன்ற தலைவர் எம். முருகன் கிளைச் செயலாளர் தாமோதரன் அய்யாவு வீரன் டி.சுப்புலாபுரம் பிச்சம்பட்டி கன்னியப்ப பிள்ளை பட்டி கொத்தட்டி கதிர் நரசிங்காபுரம் உட்பட பல்வேறு ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் 100 நாள் வேலை பணியாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவிற்கு சென்றுள்ளனர். ஆண்டிபட்டியில் திமுக நிறைந்து வருகிறது. அதிமுக கரைந்து வருவதால் அதிமுக தொண்டர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *