• Fri. Mar 29th, 2024

உதகை படகு இல்ல மேலாளர் மீது சாலையோர வியாபாரிகள் புகார்

உதகை படகு இல்லத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு கடைகள் வழங்காமல் அலைக்கழித்து வரும் படகு இல்ல மேலாளர் மீது புகார் மனு
நீலகிரி மாவட்டம் உதகை படகு இல்லத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் கடைகளை அமைத்து வாழ்வை நடத்தி வருகின்றனர்.இவர்களுடைய வாழ்வை மேம்படுத்தும் விதமாகவும், சாலையோர வியாபாரிகளைநெறிமுறை படுத்தவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. படகு இல்ல வளாகத்திற்குள் கடைகளை அமைத்து சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கி வருகிறது.இதில் குறிப்பிடும் படியாக 95 சாலையோர வியாபாரிகளில் முதற்கட்டமாக 45 சாலையோர வியாபாரிகளுக்கு கடைகளை அமைத்து வாடகைக்கு விட்டிருந்தது.இதனை அடுத்து அடுத்த கட்டமாக 14 சாலையோர வியாபாரிகளுக்கு கடைகளை அமைக்கும் விதமாக இடங்களை வழங்கியது.இவர்கள் கடந்த அக்டோபர் மாதம் அந்த பகுதியில் கடைகளை அமைத்து வியாபாரத்தை தொடங்கலாம் எனவும் அதற்காக முன்பணம் ஐம்பதாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.இதனைத் தொடர்ந்து 14 சாலையோர வியாபாரிகளும் 50 ரூபாய் முன்பணம் கொடுத்து தங்கள் கடைகளுக்கு உண்டான இடங்களை தேர்வு செய்து கடைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


இந்த நிலையில் அப்பகுதியில் படகு இல்ல மேலாளர் கடைகளை அமைக்க விடாமல் தடுத்தது மட்டுமின்றி கடைகளை அமைக்க வேண்டுமென்றால் உள்ளூர் அரசியல்வாதிகளின் சிபாரிசு வேண்டுமென்று கூறி உள்ளார்.
இந்த பகுதியில் சாலை வியாபாரிகள் கடை அமைக்க இந்த 14 நபர்களும் ஆளுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் வீதம் சுற்றுலா துறை நிர்ணயித்த கட்டணத்தை கட்டியுள்ளனர். மேலும் அக்டோபர் மாதத்தில் 17 நாட்களுக்கு உண்டான வாடகையும் செலுத்தி உள்ளனர். ஆனால் தற்பொழுது இவர்களுக்கு கடைகளை கொடுக்க முடியாது என்று படகு இல்ல மேலாளர் கூறி தங்களை அலைக்கழித்து வருவதாக சாலையோர வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறிப்பாக நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ராசா ஏற்கனவே இவர்களுக்கு சிபாரிசு கடிதம் வழங்கிய நிலையில் தற்போது வரை இவர்களுக்கு கடைகளை கொடுக்காமல் படகு இல்ல மேலாளர் சாம்சன் கனகராஜ் அலைகழித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *