• Fri. Apr 26th, 2024

உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் முக கவசம் அணியவேண்டும்

உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இடையே முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…
சுற்றுலா நகரமான உதகைக்கு நாள்தோறும் கேரளா, கர்நாடகா சமவெளி பிரதேசங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை புரிவது வழக்கம்.
குறிப்பாக உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம், பைன் பாரஸ்ட், தேயிலை பூங்கா, மரவியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.


இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் பரவி வரும் நிலையில், சுற்றுலா மாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட கொரோனா தொற்று நோய் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலா துறை சார்பில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *