• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கோத்தர் இனமக்களின் ’அய்னோர், அம்னோர்’ குலதெய்வ பண்டிகை

கோக்கால் கிராமத்தில், கோத்தர் இனமக்களின் ’அய்னோர், அம்னோர்’ குலதெய்வ பண்டிகை வெகு சிறப்பாக நடைபெற்றது.பாரம்பரிய உடை அணிந்து ஆண்கள் மற்றும் பெண்கள் நடனம் ஆடினர்.
உதகை அருகேயுள்ள கோக்கால் உட்பட பல்வேறு பகுதிகளில் கோத்தர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.இவர்களின் குல தெய்வமான அய்னோர், அம்னோர் பண்டிகை கடந்த 30ம் தேதி துவங்கியது. இதன் ஒரு பகுதியாக, கிராம பெண்கள், அவர்களின் குல தெய்வ நிலத்தில் இருந்து, களி மண்ணை எடுத்து வந்து புதுப்பானை செய்யும் பணிகள் நடைபெற்றது.பின்னர் குலதெய்வ கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, சாமை தானியத்தில் பொங்கல் செய்து புதிய மண் பானையில், குல தெய்வத்திற்கு படையல் வைப்பர்.

இந்நிலையில் இன்று கோத்தர் இன மக்களின் பாரம்பரிய இசையுடன் பழங்குடியின ஆண்களை தொடர்ந்து பெண்கள் நடனமாடினர்.உணவும், விவசாயமும் நம் வாழ்வின் முக்கிய அங்கம்’ என்பதை வலியுறுத்தும் வகையில், பழங்குடி மக்கள் அய்னோர், அம்னோர் பண்டிகையை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.இதில், சிறப்பம்சமாக, ஆண்கள் ’ஆட்குபஸ்’ என்ற உடையை அணிந்து நடனமாடுவது சிறப்பம்சமாக கருதப்படுகிறது.