• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

குண்டும் குழியுமானசாலையை சீரமைக்ககோரி சாலை மறியல்

Byகுமார்

Jul 18, 2022

மதுரையில் சேதம் அடைந்த குண்டும் குழியுமானசாலையை சீரமைப்பு தர கோரி சக்கிமங்கலம் கல்மேடு சத்யா நகர் ஆண்டாள்கொட்டாரம் கிராம பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் பகுதியில் சேதம் அடைந்த குண்டும் குழியுமான சாலையை சீரமைத்து புதிய தார் சாலை அமைத்து தர கோரி சக்கிமங்கலம் ஆண்டாள்கொட்டாரம் கல்மேடுநகர் சத்யாநகர்
கிராம பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் .

இதனை தகவல் அறிந்து காவல்துறையினர் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் காவல்துறை ஊராட்சி மன்ற தலைவர் வார்டு உறுப்பினர் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். புதிய தார்சாலை அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் கூறி அமைத்து தர ஏற்பாடு செய்து தரப்படும் என கூறியதால் பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டுகலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வார்டு உறுப்பினர் அழகுமணி செய்தியாளர்களிடம்கூறியது கல்மேடு நகர் முதல் அணைக்கட்டு வரை உள்ள தார்சாலை சேதமடைந்துள்ளது .இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை நெடுஞ்சாலை துறையிலும் மனு அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அந்த பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதாகவும் இரு சக்கரத்தில் வாகனத்தில் செல்பவர்கள் பெரும் விபத்துக்கு உள்ளாகின்றனர். இதனால் நாய் தொல்லையிலிருந்து பொதுமக்கைளை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் .மேலும்மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சுற்றி உள்ள கிராம பெnதுமக்கைளை ஓன்றுதிரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை இடப்படும் என கூறினார்.