• Mon. Jun 23rd, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

பான் இந்தியா படமாக உருவாகும் ஏகே61 படம்…

Byகாயத்ரி

Jul 18, 2022

வலிமையை தொடர்ந்து தற்போது 61வது படத்தில் ஹச் வினோத்துடன் இணைந்துள்ளார் அஜித்குமார். இந்த படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார். ஹைதராபாத்தில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்போது சென்னையில் சில காட்சிகளை படமாக காத்திருப்பதாக கூறப்படுகிறது.

வங்கி கொள்ளை சார்ந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்காக சென்னையில் உள்ள மவுண்ட் ரோடு போன்ற மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அஜித் தனது விடுமுறை நாட்களைக் கழிக்க வெளிநாடு சுற்றுப்பயணம் செய்துள்ளார். ஐரோப்பிய நாடுகளை பைக் மூலம் சுற்றி வரும் அஜித் சமீபத்தில் பாரிஸில் இருக்கும் காட்சிகள் வீடியோக்கள் வெளியாகி வைரலாகின. அங்கும் அவரது ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது.

இந்த ஆண்டு தீபாவளிக்கு படம் வெளியாகும் என கருதப்படும் நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்குள் படப்பிடிப்பு முடிக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்திற்கு சுப்ரீம் சுந்தர் டான்ஸ் மாஸ்டராக ஒப்பந்தமாகியுள்ளார். முக்கிய வேடங்களில் மஞ்சு வாரியர், வீரா,ஜான் கொக்கன் மற்றும் மகாநதி சங்கர் ஆகியோர் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. தற்போது ஏகே 61 படத்தில் லேட்டஸ்ட் தகவலாக இதில் தெலுங்கு திரைப்படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து வரும் நடிகர் அஜய் இணைந்துள்ளதாக தெரிகிறது. பான் இந்தியா மூவி என்பதால் மற்ற மொழி முன்னணி பிரபலங்களை அடுத்தடுத்து களமிறங்குகிறது படக்குழு.