தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது .விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மோடி அரசை கண்டித்தும், ஏழை எளிய மக்களை பாதிக்கும் 2022 மின்சாரத் திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறக் கோரியும் மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய செயலாளர் பிச்சைமணி தலைமையில் 60க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தேசிய நெடுஞ்சாலை வழியாக கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்து இந்தியன் வங்கி முன்பு அமர்ந்து சாலையில் மறியல் போராட்டம் செய்த னர். இதனால் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து விரைந்து வந்த ஆண்டிபட்டி போலீசார் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்துள்ளனர்.