மதுரை அண்ணாநகரில் வேளாங்கண்ணி மாதாவுக்கு கடந்த 1976ம் ஆண்டு ஆலயம் அமைக்கப்பட்டது.
இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் அன்னை பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
முன்னதாக மதுரை அண்ணாநகர் பகுதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் மாதா திருவுருவ படத்திற்கு மலர்களால் அலங்காரம் செய்து ஊர்வலமாக கொண்டு வந்தனர்.இந்த ஊர்வலத்தில் ஆலய நிர்வாகிகள், பேராயர்கள், கிறிஸ்தவர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து ஆலய வளாகத்தின் முன் உள்ள வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கொடி மரத்தில் வேளாங்கண்ணி அன்னை உருவம் பொறியப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டு திருவிழா தொடங்கியது.இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு அன்னை வேளாங்கண்ணி மாதாவை வழிபட்டனர். தொடர்ந்து அடுத்த மாதம் 8 ம் தேதி திருப்பலி நிகழ்ச்சியும், 9ம் தேதி கொடி இறக்க நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.