தொடரும் அழிவின் விளிம்பில் உள்ள சாம்பல் நிற தேவாங்குகளின் சாலை விபத்து இறப்பு. தமிழ்நாடு அரசு பாதுகாக்கப்பட்ட பல்லூயிர் தலமாகவும் அறிவித்து அழிவின் விளிம்பில் உள்ள சாம்பல் நிற தேவாங்குகளை பாதுகாக்க வேண்டும்.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கேசம்பட்டியில் அழிவின் விளிம்பில் உள்ள சாம்பல் நிற தேவாங்குகள் வாழ்கின்றன.
பொதுவாக தேவாங்குகள் வாழ்ந்தால் பல்லுயிர் பெருக்கம் நடைபெறும் என்பது உயிரி-அறிவியல் சாம்பல் நிற தேவாங்குகள் கேசம்பட்டி பகுதிகளில் கடந்த மே மாதம் மட்டும் சாலை விபத்தில் 2 தேவாங்குகளும்,இந்த மாதம் 1 தேவாங்கும் இறந்துள்ளது.
நாம் பார்த்து இத்தனை தேவாங்குகள் இறக்கிறது என்றால், மாதத்திற்கு
பார்க்காமல் எத்தனை தேவாங்குகள் இறக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தேவாங்குகளைப் பாதுகாப்பதற்காக, இந்திய அரசு 1972 ஆம் ஆண்டு வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், தேவாங்கு ஒரு அட்டவணை 1-இன் கீழ் பாதுகாக்கும் பட்டியலில் வைத்துள்ளது.
மேலும், பல்லுயிர் வகைமை சட்டம் 2002-ன் படி பல்லுயிர்களை பாதுகாக்க வேண்டும்.
எனவே பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் வாழும் தலமாகவும் அறிவித்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
