திருப்பரங்குன்றம் ரோப் கார் கிட்டத்திற்கு ரூ.23 கோடி செலவாகும். ஆனால் ரூ. 5 கோடி தான் நிதி ஒதுக்கியுள்ளனர். திருப்பரங்குன்றம் சஷ்டி மண்டபத்தை ஊருக்கு ஒதுக்கு புறமாக கட்டியுள்ளனர் என ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., கூறினார்.
அதிமுக பூத்கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக நிர்வாகிகளுக்கு MLA ராஜன் செல்லப்பா ஹாட் பேக் வழங்கினார்.
திருநகரில் நடந்த அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது..,
2026ல் அ.தி.மு.க., ஆட்சி அமைவது உறுதி. வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் முதல்வர் ஸ்டாலின் திணறுகிறார்.

தமிழகத்தில் கொள்ளை, கொலை, பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை. குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. போலீசாருக்கு கூட பாதுகாப்பு இல்லை. அனைத்து துறைகளும் சீரழிந்து விட்டன. நேற்று போலீஸ் ஏ.டி.ஜி.பி. கைது செய்யப்பட்டுள்ளார். இது மிகப்பெரிய களங்கம்.
திருப்பரங்குன்றத்தில் மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு ரோப் கார் அமைக்க ரூ.23 கோடி செலவாகும் என்றனர். ஆனால் அமைச்சர் சேகர்பாபு ரூ. 5 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

புதிதாக கட்டப்படும் சஷ்டி மண்டபம் யாருக்கும் பயனின்றி தென்கால் கண்மாயில் அமைக்கபடுகிறது. சஷ்டி மண்டபம் யாருக்கும் பயனின்றி கண்மாய்க்குள் கட்டப்பட்டுள்ளது. தி.மு.க., மோசமான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. மக்கள் விரைவில் வீட்டுக்கு அனுப்புவார்கள் என ராஜன் செல்லப்பா MLA கூறினார்.

அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா எந்தவித திட்டங்களும் செயல்படுத்தவில்லை என ஆதங்கங்கத்துடன் தொண்டர்களிடம் கூறினார்.