• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

வேலூரில் நோய் பரவும் அபாயம்!

Byமதன்

Jan 21, 2022

வேலூர் மாவட்டத்தின், மத்திய பகுதியான வேலூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள குடியிருப்பு பகுதிகளில் சுமார் 650 பேர் வசிக்கின்றனர். இங்குள்ள நெல்சன் கால்வாயில், கடந்த ஒரு மாத காலமாக அடைப்பு ஏற்பட்டு பல்வேறு குப்பைகள் மலைபோல் தேங்கி உள்ளன. இதன் மூலம் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது!

இது குறித்து மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதியினர் கூறுகின்றனர்! மேலும் இதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கையினை விரைவில் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்!