• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஜிஎஸ்டி சட்டத்தால் சாமானிய மக்களுக்கு வேலை இழப்பு அபாயம் -விக்கிரமராஜா பேச்சு

ஜிஎஸ்டி சட்டத்தில் கொண்டு வரப்படம் தொடர் மாற்றங்கள் கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளன. இதனால், வணிகம் பாதிக்கப்பட்டு, அதை சார்ந்துள்ள சாமானிய மக்களுக்கு வேலை இழப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது என வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்…
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நீலகிரி மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா உதகை பிங்கர்போஸ்டில் நடந்தது.
வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்துக்கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்து, சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சட்ட விதிகளை கடைப்பிடிப்பது குறித்து வணிகர்களிடம் தெளிவை ஏற்படுத்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், உதகை, குன்னூர், கோத்தகிரி நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட்டில் உள்ள கடைகளின் வாடகை பிரச்சினையை தீர்க்க நகராட்சி, உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் வணிகர்கள் அடங்கிய வாடகை சீரமைப்புக்குழு தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு வாடகையை சீரமைத்து நிர்ணயக்கும்.

அது வரை ஆட்சியர், ஆணையர்கள் உயர்த்தப்பட்ட வாடகையை வியாபாரிகள் செலுத்த நிர்பந்திக்கக்கூடாது. கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் தடை சட்டம் பாரபட்சமாக உள்ளது. அரசு தடை செய்துள்ள 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களை வியாபாரிகள் விற்கக்கூடாது. இந்த வகை பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சி செய்யலாம். ஆனால் பெரு நிறுனங்கள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்களின் பொருட்களை விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையால் உள்நாட்டு வணிகம் அழிந்து வருகிறது. உள்நாட்டு வணிகத்தை பாதுகாக்கும் வகையில் இந்த சட்டத்தில் உரிய மாற்றம் கொண்டு வர வேண்டும்.
உணவு பாதுகாப்பு சட்டங்கள், ஜிஎஸ்டி சட்டத்தில் தொடர் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. இவை பெரும் நிறுனங்களுக்கு ஆதரவாக உள்ளன. பிரதமரும், முதல்வரும் உரிய உள்நாட்டு வணிகத்தை பாதுகாக்க வேண்டும்.
வணிகத்தை சார்ந்து 1 கோடி பேர் உள்ளனர். இந்த பிரச்சினை தொடந்தால் 10 ஆண்டுகளில் இவர்கள் வாழ்வாதாரம் அற்று போய்விடும். இதனால், வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும் அபாயம் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.