

குடியிருப்பில் முழுவதும் சூழ்ந்துள்ள நீர் துர்நாற்றத்துடன் மற்றும் பூச்சிகளுடன் வருவதால் தொற்று பரவும் அபாயத்தில் பொதுமக்கள்
மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 70 மற்றும் 60-வது வார்டு இரண்டையும் இணைக்கக்கூடிய எல்லீஸ் நகர் சாலை முத்துநகர் பகுதி உள்ளது .

இதில் கடந்த மூன்று நாட்களாகவே மாடக்குளம் கம்மாயிலிருந்து திறந்துவிடப்படக்கூடிய தண்ணீர் ஆனது கோரை வாய்க்கால் வழியாக திருமால் நதியில் கலந்து செல்வது வழக்கம். ஆனால் சமீப காலமாகவே இந்த கோரவாய்க்காலானது அடைப்பு ஏற்பட்டு சாலை முழுவதும் நீர்கள் சூழ்ந்து மற்றும் குடியிருப்புகளை சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் துர்நாற்றம் அதிகம் வீசுவதாலும் கொசுக்கள் மற்றும் விஷ ஜந்துக்கள் வீட்டுக்குள் வருவதால், பெரும் அச்சமாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றன.
மேலும் இது குறித்து மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றன தொடர்ந்து இதுபோன்று நடந்து வருவதால் ,இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதை அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

