

மதுரை அவனியாபுரம் பகுதியில் கழிவு நீரோடு மாட்டுச்சாணம் கலந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் வீட்டிற்குள் முடங்கிய மக்கள் - நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை அவனியாபுரம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக கழிவுநீரோடு மாட்டுச் சாணம் கலந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் குழந்தைகள் வயதானவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளதாகவும் துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் குற்றம் சாட்டிய பகுதி மக்கள் நடவடிக்கை எடுக்க விட்டால் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100வது வார்டு பகுதியான அவனியாபுரம் ராமசாமி கோனார் தெருவில் இருபதுக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கடந்த 10 தினங்களுக்கு மேலாக கழிவுநீர் குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் வீடுகளில் குடியிருப்போர் வெளியே வர முடியாத நிலை உள்ளது மேலும் இப்பகுதியில் கால்நடை வளர்ப்போர் அதிகம் என்பதால் கால்நடை கழிவுகள் அனைத்தும் கழிவுநீர் கால்வாயில் கலந்துவிடுவதால் கழிவு நீரோடு மாட்டுச்சாணமும் கலந்து துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமல்லாமல் நடந்து செல்ல முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. தெரு முழுவதும் மாட்டுச் சாணம் கலந்த கழிவுநீர் இருப்பதால் வயதானவர்கள்,குழந்தைகள் இரு சக்கர வாகனம் வைத்திருப்போர் என யாரும் செல்ல முடியாத ஒரு நிலை உள்ளது இது தொடர்பாக கருத்து தெரிவித்த பகுதி மக்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக இப்பகுதியில் கழிவு நீர் வீடுகளுக்கு முன் தேங்கி நிற்பதால் யாரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாத ஒரு நிலை உள்ளதாகவும் துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் வயதானவர்கள் குழந்தைகள் மருத்துவமனைக்கு கூட செல்ல முடியாத ஒரு நிலை உள்ளதாகவும் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வயதானவர்களுக்கு மாட்டுச்சாண துர்நாற்றத்தால் மூச்சுத் திணறல் ஏற்படுவதாகவும் கைகுழந்தைகளுக்கு நோய் பரவி வருவதாகவும் தெரிவித்த பகுதி மக்கள் உடனடியாக பகுதியில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க விட்டால் அடுத்த கட்ட போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.

