• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அப்பளம் கொடுக்காததால் கல்யாண பந்தியில் கலவரம் !!! வைரல் வீடியோ

ByA.Tamilselvan

Sep 5, 2022

கல்யாண வீட்டில் கலவரம் வர பல காரணங்கள் இருக்கும் கேரளாவில் கல்யாணப்பந்தியில் அப்பளம் கொடுக்காததால் கலவரம் வெடித்துள்ளது அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கேரளமாநிலம் ஆலப்புழாவில் முட்டம் பகுதியில் உள்ள மண்டபத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு திருமணம் நடந்தது. திருமணத்தில் மாப்பிள்ளையின் நெருங்கிய நண்பர்கள் பந்திக்கு சாப்பிட சென்றனர். அங்கு சாப்பிட கூடுதலாக அப்பளம் கேட்டுள்ளனர். அப்பளம் கொடுக்காததால் மண்டப ஊழியர்களுக்கும் ,மாப்பிள்ளையின் நண்பர்களுக்கும் இடையே பெரும் சண்டை ஏற்பட்டது. இந்த தகராறு தொடர்பாக 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.