
சேவை பெறும் உரிமைச்சட்டத்தை வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என எதிர்பாக்கிறோம் என மநீம அறிக்கையில் வலியுறுத்தல்.
சேவை பெறும் உரிமைச் சட்டத்தை விரைந்து நிறைவேற்ற மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் “லஞ்ச ஊழலை க் கட்டுப்படுத்துவதோடு அரசின் சேவைகள் மக்களுக்கு விரைவாகக் கிடைத்திட வழிவகுக்கும் இச்சட்டத்தை நிறைவேற்றுவோம் என்று திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தது. அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழகத்திலும் நிறேவேற்றப்படும் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
