• Fri. Mar 29th, 2024

இந்தியாவை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக்க அமெரிக்கா ஆதரவு

ByA.Tamilselvan

Sep 22, 2022

சீர்திருத்தப்பட்ட ஐ.நா கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இந்தியா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளை கொண்டு வர அமெரிக்க ஆதரவு தெரிவித்துள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க அமெரிக்கா ஆதரவு அளித்துள்ளது. வெள்ளை மாளிகையில் மூத்த அதிகாரி கூறும்போது, சீர்திருத்தப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இந்தியா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளை கொண்டு வர அதிபர் ஜோபைடன் ஆதரிக்கிறார். இந்த 3 நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு வரலாற்று ரீதியாக தொடர்ந்து பின்னால் நிற்கிறோம் என்றார். அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும்போது, இந்தியா இன்றும் சில ஆண்டுகளில் உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறும். எனவே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமரவில்லை என்றால் எங்களுக்கு மட்டும் அல்ல, சர்வதேச அமைப்புகளுக்கும் அது நல்லதல்ல என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *