• Wed. Apr 24th, 2024

இந்தியருக்கு கிடைத்த வாழ்வுரிமை விருது

Byமதி

Sep 30, 2021

சிறார் பாதுகாப்பு முதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரை சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த பாடுபடுவோருக்கு வழங்கப்படும் விருது “வாழ்வுரிமை விருது”. இது மாற்று நோபல் பரிசு என்றும் அழைக்கப்படுகிறது.

இந்தாண்டுக்கான விருதுகள்தற்போது அறிவிக்கப்பட்டது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ‘லைப்’ எனப்படும் வனம் மற்றும் சுற்றுச்சூழல் சட்ட நடவடிக்கை அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2005ல், வழக்கறிஞர்களான ரித்விக் தத்தா, ராகுல் சவுத்ரி ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு சட்ட ரீதியாக தீர்வு கண்டு வருகிறது.

கனடாவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் பிரெடா ஹசன், பெண்களின் மீதான பாலியல் கொடுமைக்கு எதிராக போராடும் கேமரூனைச் சேர்ந்த மார்த்தே வான்டோ, ரஷ்யாவின் சுற்றுச் சூழல் ஆர்வலர் விளாடிமிர் ஸ்லிவ்யக் ஆகியோருக்கும் இந்தாண்டின் வாழ்வுரிமை விருது வழங்கப்படுகிறது. ஸ்வீடனில் டிசம்பர் 1ம் தேதி நடைபெறும் விழாவில், நால்வருக்கும் தலா 85 லட்சம் ரூபாய் பரிசுடன் பதக்கம் வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *