• Mon. Nov 4th, 2024

வாடிப்பட்டி பகுதியில்கிராம சபை கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை

ByN.Ravi

Oct 3, 2024

மதுரைமாவட்டம், வாடிபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குட்லாடம்பட்டி, ஆண்டிபட்டி ஊராட்சி மன்றங்களில், காந்தி ஜெயந்தி முன்னி ட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. குட்லாடம் பட்டி ஊராட்சி மன்ற சார்பாக நடந்த கூட்டத்திற்கு, ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி மீனா தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் பாண்டி, பற்றாளர் நாகரஞ்சனி, ஊராட்சி கூட்டமைப்பு செயலாளர் குணசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி மன்ற துணை த் தலைவர் கதிரவன் வரவேற்றார். வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து, ஊராட்சி செயலாளர் தனலட்சுமி அறிக்கை வாசித்தார்.
இந்த கூட்டத்தில், ஒருங்கிணைந்த தூய்மை பணி செய்த தூய்மை பணியாளர் மற்றும் தூய்மை காவலர்களுக்கு பொன்னாடை அணிவித்து பரிசு வழங்கி கௌரவப் படுத்தப்பட்டது. மேலும், ஆற்றுப்படுத்தினர் அன்ன லட்சுமி எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதி மொழி வாசிக்க உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதில், ஊராட்சி உறுப்பினர் கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அதேபோல், ஆண்டிபட்டி ஊராட்சி மன்றம் சார்பாக நடந்த கிராம சபை கூட்டத்திற்கு, ஊராட்சி மன்ற தலைவர் மீனாள் தலைமை தாங்கினார். யூனியன் கமிஷனர் லட்சுமி காந்தம் பற்றாளர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் ராமச்சந்திரன் வரவேற்றார். ஊராட்சி செயலாளர் செல்வம் தீர்மான அறிக்கை வாசித்தார்.
இந்த கூட்டத்தில், ஒருங்கிணைந்த தூய்மை பணி செய்த துப்புரவு பணியாளர் மற்றும்
தூய்மை காவலர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட பாதுகாப்பு அலுவலர் டயானா குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் பற்றி விளக்கி பேசினார்.
இதில், ஊராட்சி மன்ற உறுப்பி னர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். கச்சைைகட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆலய மணி தலைமையில் பற்றாளர் துணை வட்டார வளர்ச்சி அலுவர் கனிச்செல்வி முன்னிலையில் நடந்த கூட்டத்தில், ஊராட்சி செயலாளர் புஷ்பலதா தீர்மான அறிக்கை வாசித்தார்.
இதில், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பூச்சம்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி சீனிவாசன் தலைமையில் பற்றாளர்
லட்சுமி முன்னிலையில் நடந்த கூட்டத்தில், தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. ஊராட்சி செயலாளர் செல்வம் தீர்மான அறிக்கை வாசித்தார். ஊராட்சி துணைத் தலைவர் லதா ராஜகுரு மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *