• Fri. Jul 17th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம்:

ByN.Ravi

Oct 3, 2024

மதுரைமாவட்டம், சாணாம்பட்டியில், கல்லடிப்பட்டி தொழிலாளர் முன்னணி தொழிற்
சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். சங்கப்
பொதுச் செயலாளர் அழகர்சாமி வரவேற்றார். சங்க ஒருங்கிணைப்பாளர் ராம் பாபு சங்கத்தின் செயல்பாடு தொழிலாளர்கள் ஒற்றுமை தொழில் பாதுகாப்பு பற்றி விளக்கி பேசினார். உழைக்கும் மக்கள் மாமன்ற தலைவர் குசேலன் கலந்து கொண்டு சிறப்புரை
யாற்றினார். புதிய தொழில் மாற்றங்களுக்கு ஏற்றவாறு நாம் மாற வேண்டும். வாழ்க்கையில் எந்தவித தவறுகளும் செய்யாமல் பிள்ளைகளை நல்ல படிப்பு படிக்க வைத்து சமூகத்தில் மதிப்பு பெறும் வகையில் தீய பழக்கங்களை விட்டுவிட்டு மனைவி, மக்கள் தொழிலகம் மீது பாசத்துடன் நன்றியுடனும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில், சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில், சங்கப் பொருளாளர் மதுரை வீரபாண்டியன் நன்றி கூறினார்.