



குமரியில் மூன்று நாட்கள் நடைபெற்று பார்த்தியா ராஜ்ய மாநாடு நிறைவு பெற்றது.
நிறைவேற்றியுள்ள தீர்மானங்கள்:
- கொரோன காலத்தின் போது இரயில்வே துறை மூத்தகுடி மக்களில் ஆண்கள் (60) பெண்கள் (58) வயதை கடந்தவர்களுக்கு பயண கட்டணம் பாதியாக இருந்த நிலையை கொரோன காலத்தில் நீக்கியதை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என எங்கள் சங்கத்தின் சார்பில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டெல்லி சந்தர்மந்தீரில் எங்கள் சங்கத்தின் சார்பில், ஒரு கோரிக்கை ஆர்பாட்டம் நடத்தினோம். ஆனால் மத்திய அரசு இதுவரை எங்கள் கோரிக்கை மீது எவ்விதமான நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த காலத்தில் நடந்த ஆட்சியின் போது ரயில்வே துறை பின்பற்றிய முத்தகுடி மக்களுக்கான கட்டண குறைவை மத்திய அரசு காலதாமதம் செய்யாமல் அனுமதி ஆணையை உடனே அறிவிக்க வேண்டும் என இந்த மாநாடு முதல் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது.
2) மத்திய அரசின் பென்சனர்களில் பென்சன் பெறுகிற எல்லோருக்கும் பென்சன் தொகையில் மிகுந்த ஏற்ற தாழ்வுகள் இருப்பதால், மரணம் அடையும் பென்சனருக்கு ஈமச் சடங்கிற்கு ரூ.10,000 அனுமதிக்க வேண்டும். பல்வேறு மாநிலங்களில் குறிப்பாக கர்நாடக, பெங்கல் போன்ற பல மாநிலங்களில் மூத்த குடிமக்களுக்கு பேரூந்து பயண கட்டணத்தில் 60% குறைவாக உள்ளதை கேரளாவில் மாநில அரசு சட்டமாக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.
3)EPF பெறுபவர்களுக்கு வழங்கும் உதவித்தொகை ரூ.1000.00 என இருப்பதை ரூ.5000.00 மாக உயர்ந்த வேண்டும். 4) இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி வந்தபின். உலக நாடுகளில் “இந்தியாவின்”மதிப்பு உயர்ந்துள்ளதை கன்னியாகுமரியில் கூடிய 5_வது மாநாட்டில் சார்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு எங்கள் வாழ்த்துகளை தெரிவிக்கிறோம் என இந்த அமைப்பின் தேசிய தலைவர் சி.ஹெச்.சுரேஷ் செய்தியாளர்கள் இடம் தெரிவித்தார்.






