கன்னியாகுமரி அரசு தொடக்கப்பள்ளியில் 100 _ஆண்டு விழா கடலோர பாதுகாப்பு குழுமம் ஆணையர் சாந்தி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் 1885_ம் ஆண்டு கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டபள்ளி அதன் கல்வி பணியில் ஒரு கலங்கரை விளக்கமாக செயல்பட்டு வருகிறது. வழக்கு மொழியில், இன்றும் பள்ளியின் அடையாளச் சொல் “மலையாள பள்ளிக்கூடம்”.
தமிழக முதல்வர் தமிழகத்தில் 100_ ஆண்டுகள் கடந்து செயல்பாட்டில் இருக்கும் பள்ளிகளுக்கு விழா காணவோண்டும் என்ற அரசு ஆணையை அடுத்து இந்த விழா நடைபெற்றது.
கன்னியாகுமரி அரசு துவக்கப்பள்ளி நூற்றாண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி எஸ்.டிபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் சாந்தி வார்டு, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பா.பாபு, கவுன்சிலர் ஆனி ரோஸ் தாமஸ் முன்னாள் கவுன்சிலர் தாமஸ், பள்ளியின் முன்னாள் மாணவர், பத்திரிகையாளர் தாகூர், கவுன்சிலர் பூலோக ராஜா, விஜயகுமார் ,காளிமுத்து, விஜயலட்சுமி, ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
