காரைக்கால் மக்கள் நலனுக்காக கட்சி பாகுபாடின்றி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுக்க காரைக்கால் போராளிகள் குழுவின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்.காரைக்கால் மாவட்டத்தில் மாவட்டத்திலுள்ள பல்வேறு மக்கள் பிரச்சனைகளை கையில் எடுத்து போராடுவதற்கென காரைக்கால் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட காரைக்கால் போராளிகள் வாட்ஸ் அப் குழு காரைக்கால் மாவட்டம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளுக்கு வெவ்வேறு விதமான போராட்டங்களை முன்னெடுத்து பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுள்ளது.

இந்நிலையில் இக்குழுவின் பொதுக்குழு கூட்டம் இன்று தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்றது இதில் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி
குழுவின் நிறுவனராக பாரூக், வழிகாட்டு குழு தலைவராக சீ.சு.சுவாமிநாதன், வழிகாட்டு குழு ஒருங்கிணைப்பாளர்களாக ரஹீம், R.S.கருணாநிதி, ராமசந்திரன் ஆகியோரும், தலைவராக வழக்கறிஞர் கணேஷ், செயலாளராக விடுதலைகனல், பொதுச்செயலாளராக சிவகணேஷ், பொருளாலராக பிரபா உள்ளிட்ட 18 பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
காரைக்கால் போராளிகள் குழுவின் தலைவர் வழக்கறிஞர் கணேஷ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், நாகதியாகராஜன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காரைக்கால் மக்கள் நலனுக்காக கட்சி பாகுபாடின்றி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுக்க காரைக்கால் போராளிகள் குழுவின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.