வேலூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையத்தில் பல மாவட்டத்திற்கு செல்லக்கூடிய பேருந்துகள் இங்கு இருந்துதான் செல்கின்றன. மாவட்ட நிர்வாகம் பலமுறை கண்டித்தும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே நிற்கவைத்து செல்கின்றனர். இதனால் பேருந்துகள் செல்ல கடினமாக உள்ளதோடு, பலமுறை விபத்துகளும் நடந்துள்ளன.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் மாநகராட்சி மூலம் சாலை சீரமைக்கும் பணி செய்து கொண்டு இருக்கிறார்கள். சீரமைக்கும் பணிக்கான, கல் மட்டும் மணல்கள் மலைபோல் குவிந்துள்ளன மேலும் பேருந்துகள் கடினப்பட்டு செல்கின்றன!
மேலும் விபத்துகள் நடப்பதற்கு முன்னால் இப்பகுதியினை சீர் செய்யவேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்!