• Thu. May 2nd, 2024

பாஜக சிறுபான்மை பிரிவு தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம், பத்திரிகையாளர்கள் சந்திப்பு

BySeenu

Apr 4, 2024

மத்திய சிறையில் அடைக்கப்பட்ட கிறிஸ்துவ குருமார்களை சந்திப்பதற்காக வந்த பாஜக சிறுபான்மை பிரிவு தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம், பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில்..,

இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களோடு இணைந்து பாஜகவிற்கு, வாக்களிக்ககோரி 7 பாராளுமன்றங்களில் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறோம். பாஜக என்றாலே இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவ சமூகத்திற்கு எதிரான கட்சி என்ற போலி பிம்பம் இந்த தேர்தலில் கிழிக்கப்பட்டிருக்கிறது. சிறுபான்மை சமூகத்தின் காவலனாக வேடம் போடும் ஸ்டாலின் 21 திமுக பாராளுமன்ற வேட்பாளர்களை அறிவித்தார். அதில் சிறுபான்மையினர் ஒருவரும் கிடையாது.
பாஜகவிலிருந்து விலகி வந்ததிற்கான காரணம் இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவளிக்கத்தான் என எடப்பாடி சொன்னார். ஆனால், 33 தொகுதியில் ஒரு இஸ்லாமியருக்கு கூட வாய்ப்பு தரவில்லை. ஆனால் பாஜகவில் பால் கனகராஜ் என்ற ஒரு கிறிஸ்துவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கேரளாவில் ஒரு இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்துவருக்கு வாய்ப்பு அளித்திருக்கிறோம்.
சிறுபான்மை சமூகத்தை அச்சமுட்டி, திமுக அதிமுக வளரவிடாமல் வைத்துள்ளனர். இஸ்லாமியருக்காக பாஜகவை எதிர்க்கிறோம் என சொல்லும் திமுக, அதிமுக, சிறுபான்மையினர் முன்னேற்றம் குறித்து ஒன்றும் செய்யவில்லை. ஒரு ஸ்டார் பேச்சாளரும் சிறுபான்மையினர் இல்லை. ஆனால் பாஜக தன்னை ஸ்டார் பேச்சாளராக முன்னிலைப்படுத்தியுள்ளது.பாஜகவை ஆதரிக்கிற இஸ்லாமிய , கிறிஸ்துவ மத குருமார்களை காவல் துறை மற்றும் அரசியல் வாதிகள் மிரட்டுவது என்பது தமிழகத்தில் தொடர்கதையாகி வருகிறது.கடந்த கிறிஸ்துமஸ் விழாவில் ஆல் சோல் சர்ஜ்ஜின் குருமார்கள் சார்லஸ் சாம்ராஜ், ராஜேஷ் மதநல்லிணக்க விழாவாக கொண்டாடினார். அப்போது தன்னையும், இந்து குருமாரையும் அழைத்து விழா நடத்தினர். என்னை அழைத்து விழா நடத்தியதற்காக அவர்களை பொய் வழக்கில் கைது செய்திருக்கின்றனர்.
ஊழலற்ற பாரத பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என நினைத்தால் சிறுபான்மையினரின் ஓட்டுகள் திமுகவு அதிமுகவுக்கு கிடைக்காது.
அதனால் தான், குருமார்களை பொய் வழக்கு போட்டு திமுக கைது செய்து சிறையில்டைத்திருக்கிறார்கள்.அவரைப்பாரப்பதற்காக தான் வந்திருப்பதாக தெரிவித்தார். பாஜகவிற்கு ஆதரவளிக்கும் சிறுபான்மை மக்கள் மீது பொய் வழக்கு போட்டால், அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என்றார். தனது பிரச்சாரத்திற்கு அனுமதி அளிக்காவிட்டாலும், தொடர்ந்து பிரச்சாரம் செய்வேன். பொய் வழக்கு போட்டாலும் சந்திக்க தயாராகவே இருக்கிறேன்.
எஸ் டி பி ஐ போன்ற பயங்கரவாதிகள் பிரச்சாரம் செய்வதற்கு காவல் துறை பாதுகாப்பு அளிக்கிறது. எங்கள் கட்சியினரை நெளசாத் என்பவர் தாக்கி இருக்கிறார். பாயங்கர வாதத்தை ஒழிக்க தேசப்பற்றோடு உழைக்கிற இஸ்லாமியருக்கு முறையான பாதுகாப்பை காவல் துறையினர் வழங்க வேண்டும். நாகூர் இஸ்லாமியரை சந்திக்க சென்ற தன்னை தீவிரவாதிகள் தாக்குவதற்கு தயாராக இருக்கிறார்கள் எனக்கூறி, காவல் துறை எனது பிரச்சாரத்தை தடுக்கின்றனர். ஜனநாயக ரீதியாக கருத்தியல் உரிமையை காவல் துறை தடுக்கிறது. பாரதீய ஜனதா கட்சி தொடர்ந்து இஸ்லாமியர் வாழ்வியல் ரீதியாக முன்னேறினால் தான் தீவிரவாத செயலுக்கு செல்ல மாட்டார்கள் என்பதை உணர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. காவல் துறையினருக்கு முழுமையான ஒத்துழைப்பை நாங்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் எங்களது ஜனநாயக உரிமைக்கு தடையாக இருக்கின்றனர் எனத்தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *