ஒரு டீஸ்பூன் முல்தானி மட்டி, ஒரு டீஸ்பூன் சந்தன பொடி மற்றும் பன்னீருடன் கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட் கெட்டியாகவும் இருக்க கூடாது, நீராகவும் இருக்க கூடாது. அதனால் அதற்கேற்ப அளவில் பன்னீரை சேர்த்துக் கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி கொண்டு, 20-30 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு விடுங்கள். பின்னர் சாதாரண நீரில் முகத்தை கழுவிக் கொள்ளுங்கள்.