• Fri. Mar 29th, 2024

ஈரோடு இடைத்தேர்தல் புகார் தெரிவிக்க செல்போன் எண்கள் வெளியீடு

ByA.Tamilselvan

Jan 25, 2023

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் புகார்களை தெரிவிக்க செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் குறித்த புகார்களை கீழ்கண்ட 6 குழுக்களிடமும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம். கண்காணிப்பு குழுவினர் மற்றும் அவர்களது தொடர்பு எண்கள்
பறக்கும் படை குழு எண் 1: 7094488017 , பறக்கும் படை குழு எண் 2: 7094488049 , பறக்கும் படை குழு எண் 3: 7094488072 , நிலையான கண்காணிப்பு குழு எண் 1: 7094488076 , நிலையான கண்காணிப்பு குழு எண் 2: 7094488982 , நிலையான கண்காணிப்பு குழு எண் 3: 7094488983. மேலும், தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இதனை 1800 425 94890 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். இதேபோல மாவட்டத் தேர்தல் அலுவலகம் அமைந்துள்ள கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தை 1800 425 0424 எனும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 0424 2256782, 0424 2267672 எனும் தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *