திண்டுக்கல் தொகுதியில் பாலகிருஷ்ணாபுரம் பல பகுதிகளில் அதிமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. இதை உடைக்கும் பணியில் திமுக தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இன்னும் பிரச்சாரத்துக்கு ஒரு நாள் உள்ள நிலையில். அமைச்சர் ஐ பெரியசாமி மகனுக்காக பல இடங்களில் ஓட்டு கேட்டு வருகிறார். திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ஓட்டு கேட்டு பேசியதாவது:
திமுக அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவான கட்சி. அதிமுக போலி செக் கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறது. அந்த செக் செல்லாது. திமுக அரசு மீண்டும் பதவி ஏற்றவுடன் வேலை வாய்ப்புகள் தயாராக உள்ளன. பல துறைகளில் வேலை வாய்ப்புகள் காலியாக உள்ளன. அனைத்துக்கும் பணிகள் மற்றும் பதவிகள் தருவதற்கு திமுக அரசு தயாராக உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் ஏழை மக்களை கருத்தில் கொண்டு திட்டங்களை தீட்டி வருகிறார். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டங்களை ஏராளமாக தீட்டி உள்ளார். மக்களுக்கு அடிப்படை பிரச்சனைகள் தீர்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். குடிநீர் பிரச்சனை உடனடியாக தீர்ப்பதற்கு, வைகை அணையில் இருந்து நேரடியாக தண்ணீர் கொண்டு வந்து திண்டுக்கல் மக்களின் தாகம் தீர்க்கப்படும். உங்களின் கோரிக்கைகள் கனிவாக கேட்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். எங்களுக்கு வாய்ப்பு அளித்த வெற்றி பெறச் செய்ய வேண்டும். ஐ பி செந்தில்குமாருக்கு உங்கள் வாக்கை செலுத்துங்கள். இவ்வாறு அவர் பேசினார். மேலும் அதிமுக வலுவாக உள்ள இடங்களில் உடைக்கும் பணியை திமுக துவங்கி உள்ளது.



