• Sat. May 9th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு விதிகள் தளர்வு..!

Byவிஷா

Jan 12, 2024

முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகளில் இருந்து தளர்வு அளித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
முதுநிலை மருத்துவ மாணவர்கள் தங்களது படிப்பை முடித்த பிறகு, 2 ஆண்டு அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற விதியில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முதுநிலை மருத்துவ மாணவர்கள் தங்களது படிப்பை முடித்த பிறகு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கான காலம், 2 ஆண்டுகளாக இருந்ததை, தற்போது அதனை ஓர் ஆண்டாக குறைத்து தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும், படிப்பை முடித்த பிறகு, அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற விருப்பமில்லாதவர்கள் ரூ.40 லட்சம் கட்ட வேண்டும் என்ற விதியை மாற்றி, ரூ.20 லட்சம் கட்டினால் போதும் என்றும் இதுபோன்று, முதுகலை பட்டப்படிப்பு மாணவர்கள் ரூ.20 லட்சத்துக்கு பதிலாக ரூ.10 லட்சம் செலுத்தினால் போதும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.