• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

நிவாரண நிதி வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்த உறவினர்கள்

கொரோனா நோய் பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதியினை சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவித்து இருந்தது.

இதனையடுத்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதிக்குட்பட்ட இளையான்குடி பகுதிகளில் கொரானா நோய் பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் இல்லங்களுக்கு சென்று அவர்களின் உறவினர்களை சந்தித்து முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்ட மன்ற உறுப்பினருமான தமிழரசி ரவிக்குமார் ஆறுதல் தெரிவித்து, நிவாரண நிதி கிடைத்துள்ளதா என கேட்டரிந்தார்.

அப்போது உரிய பணம் வந்துவிட்டதாக தெரிவித்த குடும்பத்தினர், தமிழக முதல்வரின் உத்தரவின் படி நேரில் சந்தத்து ஆறுதல் தெரிவித்த சட்ட மன்ற உறுப்பினருக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் இளையான்குடி சட்ட மன்ற உறுப்பினர் சுப. மதியரசன், பேரூர் செயலாளர் நஜீமுதீன், மாவட்ட சிறுபான்மை பிரிவு நாசர், விவசாய அணி காளிமுத்து, அவைத்தலைவர் செய்யது கான், கூட்டுறவு சங்க தலைவர் சுப.தமிழரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.