• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சிறு குறு நிறுவனங்களுக்கான பீக் ஹவர் கட்டணம் குறைப்பு..!

Byவிஷா

Nov 11, 2023

தமிழகத்தில் சிறு குறு நிறுவனங்களுக்கான பீக் ஹவர் கட்டணத்தை தமிழக அரசு குறைத்து அறிவித்துள்ளது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு வசூலிக்கப்படும் தொகையானது, பீக் ஹவர் எனப்படும் காலை மற்றும் மாலை 6 மணி முதல் 10 மணி வரையில் 25 சதவீதம் கூடுதலாக வசூலிக்கபடுகிறது.
இந்த கூடுதல் பீக் ஹவர் மின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சிறுகுறு தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பான பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றுள்ளன.
சிறுகுறு தொழில் நிறுவனங்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த பீக் ஹவர் கட்டணத்தை தற்போது தமிழக அரசு குறைத்துள்ளது. அதன்படி, முன்பு 25 சதவீதம் கூடுதலாக விதிக்கப்பட்ட தொகையானது 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க இனி 50 சதவீத மூலப்பொருள் சலுகை வழங்கப்படும் எனவும் தமிழக அரசு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.  பீக் ஹவர் கட்டண குறைப்பு சலுகை காரணமாக 188.79 கோடி ரூபாய் இழப்பும், சூரிய சக்தி மின்சார உற்பத்தி சலுகை காரணமாக 7.31 கோடிரூபாய் இழப்பீடும் ஏற்படும் என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.