• Tue. Apr 30th, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் சாதனை…

ByKalamegam Viswanathan

Aug 5, 2023

ஜெர்மனி நாட்டில் நடந்த உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகள் சாதனை…

ஜெர்மனி நாட்டில் உலக அளவில் உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகள் 29 பேர் கலந்து கொண்டனர். இப்போட்டி ஜூலை 28ம் தேதி முதல் நாளை ஆகஸ்ட் 6 ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதில் 26 நாடுகளைச் சேர்ந்த 700 உயரம் குறைந்த மாற்றுத்திறன் வீர வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். தமிழக மாற்றுத்திறன் வீரர் வீராங்கனைகள் 7 பேர் கலந்து கொண்டனர். தமிழக வீரர்கள் இப்போட்டிக்கு செல்வதற்கு விமான கட்டணம் நுழைவு கட்டணம், உணவு, தங்கு வசதி மற்ற செலவு களுக்காக தலா ஒவ்வொருவருக்கும் ரூ 2 லட்சத்து 49 ஆயிரம் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பாக மானுடய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காசோலை வழங்கி தன்னம்பிக்கையுடன் சென்று வெற்றி வாகை சூடிட வீரர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். போட்டிகள் ஊனத்தின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
அதன் முத்தாய்ப்பாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் குண்டு வட்டி ஈட்டி எறிதலில் மூன்று தங்க பதக்கமும், மதுரை மாவட்டம் அச்சம்பத்து கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் குண்டு எறிதலில் தங்கமும், பட்டு எறிதலில் வெண்கல பதக்கமும், புதுக்கோட்டை மாவட்டம் கோனாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கமும், அதே புதுக்கோட்டை மாவட்டம் ஒடுகாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் பேட்மின்டனில் தங்கப்பதக்கமும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வெண்ணிலா 60 மீட்டர், 100 மீட்டர் வட்டு எறிதலில் மூன்று வெள்ளி பதக்கமும், இன்பத்தமிழி 60 மீட்டர் 100 மீட்டரில் இரண்டு வெண்கல பதக்கமும், திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு கிராமத்தைச் சேர்ந்த நளினி குண்டு வட்டு எறிதலில் வெண்கல பதக்கமும் மற்றும் இரட்டையர் பேட்மிட்டன் பிரிவில் வெண்கல பதக்கமும் பெற்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர். இப்போட்டி நான்கு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் முக்கிய போட்டியாகும்.
சென்னைக்கு ஏழாம் தேதி வருகின்ற சாதனை புரிந்த மாற்றுத் திறனாளிகள் தமிழக முதல்வர் ஸ்டாலினையும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *