• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

குமரி அணைகள்- கழுகு பார்வை

கடும் வெயில் காரணமாக குமரி மாவட்டத்தில் உள்ள அணைகள் வேகமாக வறண்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மேலும் வெப்ப அலைகள் வீசும் என்பதால் மதிய நேரங்களில் பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வெளியே வர வேண்டாம் என அந்தந்தத மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இதனைதொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை மழை பெய்து வந்தது.

இருந்த போதிலும் குமரி மாவட்டம் முழுவதுமாக நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தின் முக்கிய நீர்ப்பிடிப்பு அணைகளில் தண்ணீரின் இருப்பு அளவு குறைந்து கொண்டே வருகிறது. 48 அடி கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 42 அடியாகவும், 77 அடி கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 46 அடியாகவும் குறைந்துள்ளது. 18 அடி கொண்ட சிற்றார் 1, 2 அணைகளின் நீர்மட்டம் 9 அடியாகவும் குறைந்துள்ளது.