

இந்திய எலும்பியல் சங்கத்தால் (IOA) ஏற்பாடு செய்யப்பட்டு, 2012 முதல், ஆகஸ்ட் 4 ஆம் தேதி இந்தியாவில் தேசிய எலும்பு மற்றும் மூட்டு தினமாக அறிவிக்கப்பட்டது. இந்த வருடாந்திர நிகழ்வு ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 6 வரை ஒருவார கால விழிப்புணர்வு நிகழ்வுகளாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் மதுரையின் முன்னணி மல்டி ஸ்பெஷாலிட்டி மற்றும் அவசர சிகிச்சை மருத்துவமனையான தேவதாஸ் மருத்துவமனையில் தேசிய எலும்பு மற்றும் மூட்டு தினம் கொண்டாடப்பட்டது. ‘ஒவ்வொருவரும் ஒருவருக்கு பயிற்சி அளித்து ஒவ்வொருவரையும் காப்பாற்றுவோம்’ என்ற கருப்பொருள், சாதாரண மனிதனுக்கும் முதலுதவி பயிற்சி அளிப்பதை வலியுறுத்துகிறது, நாடு முழுவதும், IOA இன் பிரிவுகள் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் எலும்பு ஆரோக்கியம் பற்றிய கல்வி விரிவுரைகளை வழங்கியும் வருகின்றது. மேலும் எங்கள் மருத்துவமனை மதுரையில் இந்த முயற்சியை முன்னெடுத்து வருகிறது என்று தேவதாஸ் மருத்துவமனையின் தலைவர் பேராசிரியர் தேவதாஸ் தெரிவித்தார்.
