• Tue. Jun 17th, 2025
[smartslider3 slider="7"]

ரவி சார் நீங்க சங்கி தான் ஒத்துக் கொள்கிறோம்-விருதுநகர் மாணிக்கம் தாகூர்எம்.பி ட்வீட்

ByKalamegam Viswanathan

Feb 22, 2023

ரவி சார் நீங்க சங்கி அல்ல அறிவாளி என நினைத்தோம் ஒத்த பேச்சில நீங்க யாருன்னு காட்டிவிட்டீர்கள் சங்கி தான் ஒத்துக் கொள்கிறோம் சார். – விருதுநகர் எம்பி.மாணிக்கம் தாகூர் ட்வீட்


இந்தியாவை சிதைத்த கார்ல் மார்க்ஸின் சிந்தனை தற்போது புறந்தள்ளப்பட்டுள்ளது. ஆபிரகாம் லிங்கனை ஜனநாயகத்திற்கு உதாரணமாக காட்டுவதும், சார்லஸ் டார்வின் பரிணாம வளர்ச்சி குறித்த கோட்பாட்டை பின்பற்றுவதும் மேற்கத்திய அடிமை மனநிலையை காட்டுகிறது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதற்கு பதில் அளிக்கும் விதமாக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தனது ட்விட்டர் பக்கத்தில்:ரவி சார், நீங்க சங்கி் அல்ல, நீங்க அறிவாளி, நீங்க நல்ல படித்தவர், நீங்க நல்ல போலீஸ் அதிகாரி என நினைத்தோம். ஆனா இந்த ஒத்த பேச்சில நீங்க யாரு என காட்டிவிட்டீர்களே சார். இப்ப நீங்களும் சங்கி தான் ஒத்துகொள்கிறோம் எங்க கணிப்பு தவறு சார் என ட்வீட் செய்து உள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.