• Mon. Jan 20th, 2025

பிக் பாஸ் 8 கன்பெக்சன் அறையில் கதறியழுத ரவீந்தர்… நடந்தது என்ன?

ByIyamadurai

Jan 8, 2025

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் கன்பெக்சன் அறையில் ரவீந்தர் கதறியழுத ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதனால் அவர் வெளியேற்றப்படுவார் என்று கூறப்படுகிறது.

விஜய் டிவியில் பிக்பாஸ் 8 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இந்த மாதம் 100 நாட்களை எட்ட உள்ளது. ப்ரீஸ் டாஸ்க் முடிவுக்கு வந்து, தற்போது, இந்த வாரத்தில் இருந்து பழைய போட்டியாளர்கள் பிக்பாஸ் 8 வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளார்.

அவர்கள் தேர்வு செய்யும் ஒருவர் மிட் வீக்கில் எலிமினேட் ஆவார் என கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது பிக்பாஸ் 8 சீசன் இன்றைய நிகழ்ச்சியின் 2வது புரொமோ வெளியாகியுள்ளது. அதில் ரவீந்தர் வீட்டிற்குள் பேசக் கூடாத விஷயங்களை பேசியுள்ளார், இதனை பிக்பாஸ் கன்பெக்சன் அறைக்கு அழைத்து கண்டித்துள்ளார் .இதைக் கேட்ட ரவீந்தர் கதறி அழுதுள்ளார். வீட்டிற்கு வெளியே நடந்தவற்றை பேசக்கூடாது என்று பிக் பாஸ் நேற்று உத்தரவிட்ட நிலையில், அதை ரவீந்தர் மீறியதால், அவர் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.