மதுரை மருத்துவக்கல்லூரி டீனாக ரத்தினவேல் நீடிப்பார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மதுரை மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு புதிதாக சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சிகடந்த சிலதினங்களுக்கு முன்பு நடந்தது. அதில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றதாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரத்தில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
மதுரை கலெக்டர் அனிஷ்சேகர் மாணவர்களிடம் விசாரனை நடத்தினார். மேலும் மாணவர்கள் உறுதி மொழியை ஆங்கிலத்தில் தான் ஏற்றோம் என விளக்கம் அளித்தனர்.எதிர்கட்சி துணைத்தலைவர் ஒ.பி.எஸ் உள்ளிட்ட பலர் மீண்டும் ரத்தினவேலு டீனாக நியமிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மதுரை அரசு மருத்துவக்கல்லிரி டீனாக ரத்னவேல் நீடிப்பார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சமஸ்கிருதம் சர்ச்சை விவகாரம் தொடர்பாக, நேரில் சந்தித்து அளித்த விளக்கத்தை ஏற்று மீண்டும் ரத்தினவேல் டீனாக நியமிக்கப்படுகிறார் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.