• Thu. Apr 25th, 2024

டிஜிட்டல் கந்து வட்டியைத் தோலுரித்துக் காட்டும் ‘RAT’

ஆம்ரோ சினிமா நிறுவனம் தயாரிக்கும்முதல் படம்”RAT” விஞ்ஞான உலகத்தில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பல நன்மைகள் நடந்தாலும், சில தீமைகளும் அன்றாடம் நடந்தே வருகின்றன. தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு மக்களை மூளைச்சலவை செய்து அவர்களை ஏமாற்றும் நபர்களும் அதிகமாக வளர்ந்து வருகிறார்கள். அப்படி ஏமாற்றப்பட்டவர்கள் அவமானத்தால் தற்கொலைக்குத் தூண்டப்படும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றனஒவ்வொரு நாளும் ஓரிரண்டு நபர்களாவது இப்படிப் பாதிக்கப்பட்டுக் தற்கொலை செய்துகொள்வது செய்திகளாக வந்து கொண்டிருக்கிறது


இது ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்சினையாகவே மாறிவருகிறது. இப்படிப்பட்ட ஆன்லைன் மோசடியான டிஜிட்டல் கந்து வட்டி மூலம் மூன்று பெண்களுக்கு பெரிய துரோகம் நடக்கிறது. அந்தத் துரோகம் அவர்களை எப்படிப் பாதிக்கிறது? அதன்பின் அவர்களுக்கு என்ன ஆனது? அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்தார்களா ? இல்லையா? என்பதை விரிவாகச் சொல்லும் கதைதான் RAT.இதை இயக்குபவர் அறிமுக இயக்குநர் ஜோயல் விஜய்.இந்தப் படத்தில் கதாநாயகியாக ரேஷ்மா வெங்கட்
மற்றும் சாயா தேவி, கன்னிகா ரவி ஆகியோர் நடிக்கின்றனர்


படத்திற்கு ஒளிப்பதிவு சீனிவாஸ் தேவாம்சம் .இவர் பி.சி ஸ்ரீராம் பாசறையில் இருந்து வந்தவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் தொடர்ந்து பணிபுரிந்து வருபவர். வசனம் கருந்தேள் ராஜேஷ். இவர் திரைப்படத்துறை சார்ந்து பல நூல்களை எழுதியவர். இன்று நேற்று நாளை, அயலான், சூது கவ்வும் முதலிய பல வெற்றிகரமான திரைப்படங்களில் திரைக்கதையில் பணிபுரிந்தவர். இசை அஸ்வின் ஹேம்நாத். இவர் ‘ஆற்றல் ‘படத்தின் இசையமைப்பாளர். இப்படத்திற்கு சினேகன் பாடல்களை எழுதுகிறார்


‘RAT’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் சென்னையின் சுற்றுப்புறங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *