

தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலைப் படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள், ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்த ஆண்டுக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு, தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் ஆன்லைன் வழியாக அடுத்த மாதம் (ஜூலை) 2-ந் தேதி தொடங்க உள்ளது. ஜூலை 2-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கிறது. அதன் பிறகு பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 7-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 24-ந்தேதி வரை நடக்கிறது.
என்ஜினீயரிங் படிப்புக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 5-ந் தேதி தொடங்கியது. விண்ணப்ப பதிவு நேற்றுடன் முடிவடைந்தது. என்ஜினீயரிங் படிப்பில் சேர தமிழகம் முழுவதும் மொத்தம் 2,29,167 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் 1,87,693 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். அவர்களில் 1,55,124 பேர் சான்றிதழ்களை முழுமையாக பதிவேற்றியுள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டில் 18,174 பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கல் சேர்க்கைக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ரேண்டம் எண்ணை றறற.வநெயழடெiநெ.ழசப இணைய தளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1,87,693 மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. ஒரே மாதியாக கட்ஆப் பெறும் மாணவர்களில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பது குறித்து ரேண்டம் எண் மூலம் முடிவு செய்யப்படும்.
மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்புப் பணிகள் ஆன்லைன் மூலம் வருகிற 20-ந்தேதி வரை நடைபெறும். அதனை தொடர்ந்து தரவரிசை பட்டியல் வருகிற 26-ந் தேதி வெளியிடப்படும். மேலும் மாணவர்கள் கூடுதல் விவரங்களை www.tneaonline.org மற்றும் tndte.gov.in ஆகிய இணைய தளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்து உள்ளது.
- பசுமைப்புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு : தலைவர்கள் இரங்கல்..!பிரபல வேளாண் விஞ்ஞானியும் இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான எம்.எஸ்.சுவாமிநாதன் நேற்று (செப்.,28) … Read more
- ஜெயம் ரவி நடித்த ‘இறைவன்’ திரைவிமர்சனம்..!சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பிறகு, ஜெயம் ரவியின் மார்க்கெட் தொடர்ந்து உயர்ந்து கொண்டேதான் … Read more
- ஆசிய விளையாட்டு : பெண்கள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம்..!துப்பாக்கி சுடுதல் பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் தங்கம், வெள்ளிப்பதக்கம் … Read more
- வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இந்த ஆண்டுக்கான தென்மேற்கு … Read more
- குற்றவழக்குகளில் தொடர்புடையவருக்கு பா.ஜ.க.வில் பதவி..!இருநூறுக்கும் மேற்பட்ட குற்றவழக்குகளில் தொடர்புடைய ஒருவருக்கு பா.ஜ.க.வில் மாநில பதவி வழங்கியிருப்பது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி … Read more
- வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 215 பேருக்கு தண்டனை வழங்கி பரபரப்பான தீர்ப்பை வெளியிட்டுள்ளது.வாச்சாத்தி … Read more
- ‘ஹிட்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!இயக்குநர் தனா இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும் “ஹிட்லர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.விஜய் ஆண்டனியின் … Read more
- குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக தளவாய் சுந்தரம் நியமனம்..!அதிமுகவில் குமரி கிழக்கு மாவட்டச் செயலளராக தளவாய்சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.ஜெயலலிதா முதல்வராக இருந்த காலையில் ஒன்றுபட்ட குமரி … Read more
- சிவகாசி அருகே, பூட்டியிருந்த பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து..!விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள பாறைப்பட்டி பகுதியில், பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் … Read more
- திருப்பங்கள் தந்திடும் திருப்பாம்பரம் கோயிலில் இராகு,கேது பெயர்ச்சி !அஷ்டமா நாகர்களும் தனித்தனியாக வழிபாடு செய்துள்ள வெவ்வேறு பழம்பெருமை வாய்ந்த தலங்கள் பல இருப்பினும்இந்த எட்டு … Read more
- நற்றிணைப் பாடல் 260:கழுநீர் மேய்ந்த கருந் தாள் எருமைபழனத் தாமரைப் பனிமலர் முணைஇ,தண்டு சேர் மள்ளரின் இயலி, அயலதுகுன்று … Read more
- சிந்தனைத்துளிகள்உலகில் இருக்கக் கூடிய பழங்கள் ஒன்று சேர்ந்து ஒரு மாநாட்டைக் கூட்டின.எந்தப் பழம் அதிகச் சுவையுடையது, … Read more
- பொது அறிவு வினா விடைகள்ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் (UNDP). இந்தோசீனா போர் 1946 – ஏப்ரல் 1975 க்கு … Read more
- குறள் 537:அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்கருவியால் போற்றிச் செயின். பொருள் (மு.வ): மறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்) … Read more
- முதல்முறையாக சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டி வரும் நபர்களை கண்காணித்து, புகைப்பட பிரிண்டிங் செய்யும் ரேடார் கருவியை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார் – எஸ்பி. ஹரி கிரண் பிரசாத்கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் முதல்முறையாக சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டி வரும் நபர்களை … Read more
