

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவதற்கு அழைப்பு விடுத்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இம்மாத இறுதியில் அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்கிறார். இந்நிலையில், “இந்தியா ஒரு துடிப்பான ஜனநாயகம். புதுடெல்லிக்குச் செல்லும் எவரும் அதைத் தாங்களாகவே பார்த்து உணர முடியும். நிச்சயமாக, ஜனநாயக அமைப்புகளின் வலிமையும் ஆரோக்கியமும் விவாதத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்,” என வெள்ளை மாளிகையில் உள்ள தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் மூலோபாய தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி கூறினார்
அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணமாக வரும் 22-ம் தேதி செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தவுள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக உரையாற்ற உள்ளார். இத்தகைய கவுரவம், இதற்கு முன்பு பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா உள்ளிட்ட வெகு சில உலகத் தலைவர்களுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

